வணிகம்

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 11% உயர்வு

செய்திப்பிரிவு

தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.124 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111.56 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.810.93 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.883.31 கோடியாக இருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.01 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 1.32 சதவீதத்தில் இருந்து 1.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.45.10 கோடியில் இருந்து ரூ.70.75 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு விலை 0.58 சதவீதம் உயர்ந்து 130.75 ரூபாயில் முடிந்தது.

SCROLL FOR NEXT