விஜய் மல்லையா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்த போது அந்த நிறுவனத்தின் ரூ.1,225.3 கோடி தொகையை அவர் சம்பந் தபட்ட கிங்பிஷர் மற்றும் பார்முலா ஒன் குழுவுக்கு முறைகேடாக மாற்றி இருப்பதாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு பங்குச்சந்தைக்கு தெரிவித்தது. ஆனால் இதை விஜய் மல்லையா மறுத்திருக்கிறார்.
அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டப்பூர்வமாக நடந்தது மட்டுமல் லாமல் இயக்குநர் குழுவின் ஒப்பு தலின் அடிப்படையிலே நடந்தது. ஆனால் இப்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் காரணம் இல்லாமல் குற்றம் சாட்டுவதாக விஜய் மல்லையா கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டியாஜியோ நிறுவனம் வாங்கியது. அப்போது அனைத்து ஆவணங் களையும் பரிசோதித்த பிறகுதான் நிறுவனத்தை டியாஜியோ நிறுவனம் வாங்கியது. இப்போது என் மீது குற்றம் சாட்டுவது அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல் துரதிஷ்டவசமானதும் கூட.
இந்த குற்றச்சாட்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. யுனை டெட் ஸ்பிரிட்ஸ் அல்லது இப்போது சோதனை செய்த இ அண்ட் ஒய் நிறுவனம் எனக்கு எந்த தகவலை யும் அளிக்கவில்லை. குற்றச்சாட்டு குறித்து எதுவும் தெரியாததால் என் னால் விளக்கம் கொடுக்க முடிய வில்லை.
நான் மீண்டும் கூறவிரும்புவ தெல்லாம் அனைத்து பரிவர்த்தனை களும் சட்டப்பூர்வமாக, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு மற்றும் தணிக்கையாளர் குழு அனுமதி வழங்கிய பிறகே நடந்தது என்று விஜய் மல்லையா இ-மெயில் மூலம் கூறியிருக்கிறார்.
விஜய் மல்லையா பதவியில் இருந்த போது ரூ.1,225 கோடியை அவர் சம்பந்தபட்ட நிறுவனங்க ளுக்கு மாற்றி இருப்பதாக யுனை டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் தெரிவித்தது. தவிர, ஏற்கெனவே நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டதனால், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
செபி நடவடிக்கை
ஏற்கெனவே பல வழக்குகளில் சிக்கி இருக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி முற்றுகிறது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிதியை விஜய மல்லையா தவறாக பயன்படுத்தியதாக இந்த நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, இதன் மீது செபி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
செபியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கூறியதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறோம். இந்த விஷயத்தை தீவிர மோசடிகளை விசாரிக்கும் புலானாய்வுக் குழு (எஸ்எப்ஐஓ) உள்ளிட்ட அமைப்புகளுக்கு பரிந் துரை செய்திருக்கிறோம் என்று கூறினார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார். அவரது பாஸ்போர்டை மத்திய அரசு முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.