சர்வதேச பணக்காரர்கள் பட்டிய லில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பியோஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். முதல் முறையாக வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் ஜெப் பியோஸ். இவரது சொத்து மதிப்பு 6,510 கோடி டாலராக உள்ளது. பூளும்பெர்க் கோடீஸ் வரர் அட்டவணையில் இது தெரிய வந்திருக்கிறது.
முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 8,910 கோடி டாலராகும். நான்காவது இடத்தில் வாரன் பபெட் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 6,500 கோடி டாலராகும்.
புளூம்பெர்க் தகவல்படி ஜெப் விரைவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தற்போது அமேசான் பங்கு 744 டாலராக வர்த்தகமாகிறது. இந்த பங்குக்கு 1,000 டாலர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது அவரது சொத்து மதிப்பு 8,600 கோடி டாலராக இருக்க கூடும். கடந்த ஐந்து மாதங் களில் அமேசான் பங்கு 50%க்கு மேல் உயர்ந்தது.