வணிகம்

சென்செக்ஸ் 310 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிந்தன. லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்ததால் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 310 புள்ளிகள் சரிந்து 27774 புள்ளியிலும், நிப்டி 102 புள்ளிகள் சரிந்து 8575 புள்ளியிலும் முடிவடைந்தன.

அனைத்து துறை குறியீடு களும் சரிந்து முடிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு அதிகபட்சமாக 2.19 சதவீதம் சரிந்தது. ஆட்டோ குறியீடு 1.9 சதவீதமும், ஹெல்த்கேர் குறியீடு 1.7 சதவீதமும் சரிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில் அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், கோல் இந்தியா பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக லுபின், ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எம் அண்ட் எம் பங்குகள் சரிந்தன.

SCROLL FOR NEXT