வணிகம்

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் முதல் ஆண்டில் வரி வசூல் பாதிக்கப்படும்: வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்

ஐஏஎன்எஸ்

நாட்டில் ஒரு முனை வரி விதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்த வரி விதிப் பால் முதல் ஆண்டில் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் 22 சதவீத வளர்ச்சியை எட்டியது. ஆனால் தற்போது மறைமுக வரி வசூல் 9 சதவீத அளவுக்குத்தான் இருக்கும் என வளர்ச்சி விகிதத்தை குறைவாக கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2017-18-ம் நிதி ஆண்டில் ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக இதை செயல்படுத்துவதில் சில பிரச்சினை கள் ஏற்படலாம். இதைக் கருத் தில் கொண்டே வளர்ச்சி விகிதம் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வசூலான அளவுக்கே வரி வசூலாகும் என முதல் ஆண்டில் கூற முடியாது. மத்திய அரசுக்கு வருமானம் வராமலே கூட போகலாம். என்னவாகும் என்பது இது அமல்படுத்தப்பட்ட பிறகுதான் தெரியவரும்.

இரண்டாம் ஆண்டிலிருந்து வரி வருவாய் உயரும் என எதிர்பார்ப்ப தாகக் குறிப்பிட்ட ஆதியா, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மத்திய அரசு மட்டுமின்றி நுகர்வோரும் பயனடை வர் என்றார்.

SCROLL FOR NEXT