வணிகம்

பங்குச்சந்தையில் 10 சதவித பிஎப் தொகை?- பிஎப் அமைப்பு நாளை முடிவு

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் உயரும் பி.எப் தொகையில் 10 சதவீதம் வரை பங்குச்சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை பிஎப் அறங்காவலர் குழு நாளை கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

தற்போது 5 சதவீத பிஎப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதனை உயர்த்துவதற்கு வல்லுநர் குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த குழு 10 சதவீத தொகையை முதலீடு செய்யலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. வல்லுநர் குழுவின் பரிந்துரை நாளைய அறங்காவலர் குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் 5 சதவீத தொகையால் ஒட்டுமொத்த பிஎப் தொகை மீதான வருமானம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை. அதனால் இந்த அளவினை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. தவிர தற்போது முதலீடு செய்வது ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் ஒட்டு மொத்த பிஎப் தொகையுடன் ஒப்பிடும் போது பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பது 1 சதவீதம் மட்டுமே. ஆனால் மற்ற நாடுகளில் பிஎப் தொகையில் 30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என வல்லுநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

முன்னதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பிஎப் தொகை உயர்த்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் கூடுத லாக ரூ.1.35 லட்சம் கோடி பிஎப் அமைப்புக்கு வரும் என்று கணிக் கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் வரை ரூ.7,468 கோடி ரூபாய் இடி எப்களில் முதலீடு செய்யப்பட்டி ருக்கிறது. 7.45 சதவீதம் உயர்வு கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT