வணிகம்

‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை மட்டுமே சீர்திருத்தமாகாது’: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் கருத்து

செய்திப்பிரிவு

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மட்டுமே சீர்திருத்தம் ஆகாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரெங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நிதி ரீதியில் மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வந்த மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல என்று அவர் குறிப்பிட்டார். வரி விதிப்பு, தேர்தல் சீர்திருத்தம் ஆகியனவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீர்திருத்த நடவடிக்கையில் இந்தியாவின் பயணம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகளிடம் முடங்கிக் கிடந்தது. இவர்களிடம் முடங்கியுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக் கையாக பணமதிப்பு நீக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது தொழில் துறையைக் காக்க பாதுகாப்பான நடவடிக் கையை எடுத்து வருகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பாதிப்பாக அமையும் என்று சுட்டிக் காட்டினார். ஆனால் இதுபோன்ற தற்காப்பு நடவடிக்கைகளை அதிக அளவிலும் இந்த நாடுகளால் எடுக்க இயலாது என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT