முகேஷ் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் பத்திர (என்சிடி) வெளியீடு மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அதிக வட்டிக்குப் பெற்ற கடனை திரும்பச் செலுத்துவது மற்றும் நிறுவனம் சமீபத்தில் தடம் பதித்த ரிலையன்ஸ் ஜியோவை மேலும் விரிவாக்கம் செய்யவும் இந்தத் தொகையைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முற்றிலும் மாற்ற இயலாத கடன் பத்திரங்களாக (என்சிடி) வெளியிடப்படும். தனி ஒதுக்கீடு மூலம் இந்தக் கடன் பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ள நிறுவன பங்குதாரர்கள் பங் கேற்கும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான ஒப்பு தலைப் பெற்ற பிறகு இந்த நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
2015-16-ம் ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை உரிமப் பங்கு வெளியீடு மூலம் இந்நிறுவனம் திரட்டியது. ரிலையன்ஸ் ஜியோ முதலீட்டுக்காக பகுதியளவில் மாற்றத் தகுந்த பத்திரங்களாக இவை வெளியிடப்பட்டது.