வணிகம்

டிரென்ட்லைன் நிறுவனத்திற்கு செபி தடை

செய்திப்பிரிவு

பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) டிரென்ட்லைன் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு தடை விதித்துள்ளது. அதிக லாபம் அளிக்கப்படும் என அறிவித்த நிறுவனமும் அதன் உரிமையாளரும் அளித்த உறுதிமொழி சாத்தியமானதல்ல என்பதை விசாரணையில் தெரிந்து கொண்ட பிறகு இத்தகைய தடையை செபி விதித்தது.

சாத்தியமில்லாத வாக்குறுதிகள், அதிக லாபம் அளிப்பதான உறுதிமொழிகளை அளித்து நிதி திரட்டும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தடை விதிக்கும் பணியை செபி தொடர்ந்து செய்து வருகிறது.

டிரென்ட்லைன் எனும் நிறுவனம் ஏப்ரல் 2013-ல் வெளியிட்ட விளம்பரத்தில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோரின் முதலீட்டுத் தொகை ஓராண்டில் இரட்டிப்பாக அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தியதில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுநீல் லட்சுமண் காலே, போர்ட்போலியோ நிர்வாக சேவையை செபி விதிக்கு உட்பட்டோ அல்லது பதிவு செய்தோ நடத்தவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து காலே மற்றும் டிரென்ட்லைன் நிறுவனம் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT