வணிகம்

ஃபயர்பாக்ஸ் நிறுவனத்துக்கு பெங்களூரு ஏர்போர்ட் 10% பங்குகளை விற்றது ஜிவிகே

பிடிஐ

ஜிவிகே பவர் அண்ட் இன் பிராஸ்ட்ரெக்சர் நிறுவனம் தனது துணை நிறுவனமான பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஃபயர்பாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,290 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த பங்கு விலக்கல் நடவடிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. இந்த தொகையைக் கொண்டு நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜிவிகே கூறியுள்ளது.

பெங்களூரு விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (BIAL), ஜிவிகே நிறுவ னத்தின் துணை நிறுவனமாகும். ஏற்கெனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பிஐஏஎல் நிறுவனத் தின் 33 சதவீத பங்குகளை ஜிவிகே விலக்கிக் கொண்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கையெழுத்தானது. ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரேம் வாட்ஸா நிறுவனத்துடனான இந்த பங்கு விற்பனை மதிப்பு ரூ.2,202 கோடியாகும். தற்போது மீதமுள்ள 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்கிறது.

இது தொடர்பாக பேசிய ஜிவிகே குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜிவிகே ரெட்டி, தற்போது விமான நிலைய பங்குகளை விலக்கிக் கொண்ட போதிலும், ஜிவிகே குழுமம் தொடர்ந்து விமான நிலைய துறையில் கவனம் செலுத்தும். 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிஐஏஎல் மூலம் விமான நிலையத்தின் திறன் மற்றும் இதர கட்டமைப்புகளை படிப்படியாக அதிகரித்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளில் இந்த விமான நிலையத்தை சர்வதேச அளவிலான தரத்திற்குக் கொண்டு வர கடுமையாக உழைத்துள் ளோம் என்றும் குறிப்பிட்டார்.

எங்களது உடனடி அடுத்த கட்ட திட்டமாக மும்பை மற்றும் நவி மும்பை விமான நிலைய மேம்பாட்டு திட்டங்கள் உள்ளன என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார்மய வாய்ப்புகளின் கவனம் செலுத்த உள்ளோம். இந்த திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு ஏற்ப பிஐஏஎல் நிறுவனத்தின் பொறுப்புகளை குறைத்துக் கொள்கிறோம். மேலும் பங்குகள் விற்பனை மூலம் நிறுவனத்தின் கடன் சுமையை குறைக்க முடியும்.

இந்த பங்கு விலக்கலுக்கு பிறகு ஃபயர்பாக்ஸ் நிறுவனத் தின் வசம் 48 சதவீத உரிமை இருக்கும். சீமென்ஸ் நிறுவனம் 26 சதவீத பங்குகளும் கர்நாடக அரசு மற்றும் விமான போக்கு வரத்து ஆணையத்தின் வசம் 13 சதவீத பங்குகள் வீதமும் இருக்கும் என்பது குறிப்பிட த்தக்கது. விற்பனைக்கு பின்னர் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஜிவி சஞ்ஜெய் ரெட்டி நிர்வாக இயக்குநர் பொறுப்பி லிருந்து விலகுவார். ஃபயர்பாக்ஸ் நிறுவனம் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும்.

SCROLL FOR NEXT