வணிகம்

விஜய் மல்லையா மீது புதிய வழக்கு

பிடிஐ

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு தொடர்ந் துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி யில் வாங்கிய 1,600 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இங்கிலாந் துக்கு சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற் போது பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது ஐபிசி பிரிவு 420-ன் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை பல பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் வழக்குகள் மீதான சம்மன் எதற்கும் பதிலளிக் காமலும், ஆஜராகாமலும் விஜய் மல்லையா இருந்து வருகிறார். இதனால் அவருக்கு டெல்லி நீதி மன்றம் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவா ரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT