விஜய் மல்லையாவுக்கு சொந்தமான விமானத்தை எஸ்ஜிஐ காமெக்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. சேவை வரித் துறையினர் நடத்திய இந்த ஏலத்தில் மல்லையா வின் விமானத்தை ரூ.27.39 கோடி தொகைக்கு எஸ்ஜிஐ காமெக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏலத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில் 6-ல் ஒரு பங்கு தொகைக்கு ஏலம் கோரியுள்ளது எஸ்ஜிஐ காமெக்ஸ்.
எஸ்ஜிஐ காமக்ஸ் தலைவர் ஜிஎஸ் வஸ்தவா இதுபற்றி கூறுகையில், இந்த விமானத்தை கலை யாத்திரைக்கு பயன்படுத்தப் போகிறோம். மேலும் இந்த விமா னத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு புனித தலங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் கலை சுற்றுலாவை ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்று தெரிவித் துள்ளார்.
விஜய் மல்லையாவிடம் இருந்து 800 கோடி ரூபாய் வரிபாக்கியை மீட்பதற்காக சேவை வரித்துறை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக மல்லையாவின் சொந்த விமானத்தை சேவை வரித் துறையினர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.