மும்பையின் முதல் மிதக்கும் ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரே மாதிரியான அனுபவத்தோடு ஓட்டல்களில் உணவு சாப்பிட்டு பழகியவர் களுக்கு இந்த மிதக்கும் ஓட்டல் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மும்பையின் பந்த்ரா- வொர்லி கடற்பகுதியை இணைக்கும் பாலத்தின் பின்னணியில் மாலை நேரத்தை ‘ஏபி செலிஸ்டியல்’ என்கிற இந்த ஓட்டல் கப்பலில் மும்பைவாசிகள் செலவிடலாம்.
மிதக்கும் இந்த சொகுசு ஓட்டலை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக மஹாராஷ்டிர சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, மும்பையின் கடலோர பகுதியான பந்த்ரா- வொர்லி கடற்பகுதியை இணைக்கும் இடத்தின் அருகே மஹாராஷ்டிரா கடல்சார் வாரியத் தின் துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
மஹாராஷ்டிரா சுற்றுலா வளர்ச் சிக் கழகம், கடல்சார் வாரியத்துடன் இணைந்து இந்த கப்பலை டபிள்யூ பி இண்டர்நேஷ்னல் கன்சல்டன்ட்ஸ் என்கிற நிறுவனம் இயக்குகிறது. ஏபி செலிஸ்டியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் அமெரிக்காவில் வடிவ மைக்கப்பட்டு இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.
இந்த கப்பலில் ஓட்டலுக்காக மூன்று அடுக்குகள் உள்ளன. இதில் மேற்தளத்தில் திறந்த வெளியில் உணவருந்தலாம். 2 அடுக்குகளில் கண்ணாடி வழியாகவும் கடலை ரசிக்கலாம். மொத்தமுள்ள நான்கு அடுக்குகளையும் சேர்த்து குறைந்த பட்சம் 660 பயணிகள் பயணிக் கலாம்.
24 மணி நேர காபி ஷாப், கிளப் வசதி, இரண்டு உணவகங்களுடன் இந்த கப்பல் உள்ளது. குறிப்பாக வசதிபடைத்தவர்கள், வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்த கப்பல் உள்ளது.
முன்னதாக 2014-ம் ஆண்டில் அப்போதைய சுற்றுலா துறை அமைச்சர் சஜன் புஜ்பால் மிதக்கும் ஓட்டலை அறிமுகப்படுத்தி யிருந்தார். பல்வேறு அனுமதிகள் கிடைக்கவில்லை என்பதால் அந்த ஓட்டல் பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டுவரப்படவில்லை.
தற்போது இந்தியாவில் கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மிதக்கும் ஓட்டல்கள் உள்ளன, உலக அளவில் நியூயார்க், துபாய், ஹாங்காங், வியட்நாமின் சைகோன் உள்ளிட்ட இடங்களில் மிதக்கும் ஓட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.