பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியின் அளவை உயர்த்துவது குறித்து வரும் ஜூலை 7-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தொழி லாளர் நலத்துறை அமைச்சர் பண் டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் உயரும் பிஎப் தொகையில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பங்குச்சந்தை மற்றும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று நிதி அமைச்சகம் அறிவித் தது. இதன்படி கடந்த நிதி ஆண் டில் 5 சதவீத தொகை (ரூ.6,577 கோடி) பங்குச்சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்யப் பட்டது. வரும் ஆண்டில் முதலீட் டின் அளவை அதிகரிக்க ஆலோ சிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறிய தாவது: கடந்த மார்ச் 31 நிலவரப்படி முதலீடு செய்யப்பட்ட ரூ.6,577 கோடிக்கு 0.37 சதவீதம் லாபம் கிடைத்து ரூ.6,601 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் 30-ம் தேதி வரை ரூ.6,674 கோடி முதலீடு செய்யப்பட்டு ரூ.6,786 கோடியாக இருக்கிறது. 1.68 சதவீதம் உயர்வாகும்.
பங்குச்சந்தை முதலீடு எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை குறித்து விவாதிக்க இருக்கிறோம். இது குறித்து வல்லுநர்களின் கருத்துகளையும் நாங்கள் கேட்டி ருக்கிறோம். இந்த குழுவின் தலைவர் என்கிற முறையில் 7-ம் தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கூடுதலாக எவ்வளவு சதவீதம் முதலீடு செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
சூழ்நிலைக்கு தகுந்தது போல் முடிவெடுக்கப்படும். இருந்தாலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் தொகை 5 சதவீதத்திலிருந்து உயர்த்தப்படும் என்றே நான் நினைக்கிறேன்.
எங்களுடைய முக்கியமான நோக்கம் முதலீட்டை பாது காப்பதுதான். அதனால் எச்சரிக் கையாகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.