வணிகம்

பொதுத் துறை நிறுவனங்களுக்கு மூன்று நிலக்கரி படுகைகள் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

ஜார்க்காண்ட் மாநில தாது வளர்ச்சி கழகம், மத்திய பிரதேச சுரங்க கழகம் உள்ளிட்டபொதுத் துறை நிறுவனங்களுக்கு மூன்று நிலக்கரி படுகைகளை ஒதுக்கீடு செய்ய நிலக்கரி அமைச்சரக குழு அனுமதி அளித்துள்ளது.

மூன்று நிலக்கரி படுகைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளை ஏற்று அமைச்சர்கள் குழு அதற்கான அனுமதியளித்துள்ளது என தெரிகிறது.

இந்த மூன்று நிலக்கரி படுகைகள் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள 17 சுரங்கங்களின் பகுதியாகும். ஏற்கனவே, 14 நிலக்கரி படுகைகளை மின் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நிலக்கரி படுகைகள் ஒதுக்கீட்டிற்காக 17 அரசு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 41 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 14 நிலக்கரி படுகைகளை மின் துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜுன் மாதம் முடிவு செய்யப்பட்டது.

நிலக்கரி படுகைகள் ஒதுக்கீடு செய்வதை மீண்டும் துவக்கிய மத்திய அரசு, ஜுன் மாதத்தில் மத்திய, மாநில பொது துறை நிறுவனங்களுக்கு வழங்கியது.

SCROLL FOR NEXT