வணிகம்

காலாண்டு முடிவுகள் - கே.வி.பி., இந்தியன் வங்கி, கனரா வங்கி

செய்திப்பிரிவு

கே.வி.பி. லாபம் 9.18 சதவீதம் உயர்வு

தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 9.18 சதவீதம் உயர்ந்து 90.50 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் இந்த வங்கியின் நிகர லாபம் 82.89 கோடி ரூபாயாக இருந்தது.

செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்தில் நிகர லாபம் 4.61 சதவீதம் உயர்ந்து 212.57 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 203.19 கோடி ரூபாயாக இருந்தது. செயல்பாடுகளின் மூலமாக கிடைக்கும் வருமானம் ஜூலை செப்டம்பர் காலாண்டில் 1,494 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்தியன் வங்கி லாபம் ரூ.314 கோடி

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 314 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 305 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நிகரலாபம் 16.3 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 623 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 521 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.

இரண்டாம் காலாண்டில் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 4,078 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,340 கோடி ரூபாயாக இருக்கிறது.

கனரா வங்கி வருமானம் 14% உயர்வு

வாராக்கடன்களுக்காக ஒதுக்கீடு இருந்ததால் கனராவங்கியின் நிகரலாபத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 626 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 627 கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்த வருமானம் 14.3 சதவீதம் உயர்ந்து 11,915 கோடி ரூபாயாக செப்டம்பர் காலாண்டில் இருக்கிறது. கடந்த வருடம் 10,427 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.

வாராக் கடன்களுக்காக ஒதுக்கிய தொகை 912 கோடி ரூபாயாக இருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 2.36 % இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.92%, நிகர வாராக்கடன் 2.31% இருக்கிறது.

SCROLL FOR NEXT