பிஎஸ்இ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இன்று தொடங்குகிறது. இந்த பங்கு வெளி யீடு மூலம் ரூ.1,243 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிறு வனத்தின் பங்குகளுக்கு இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலையாக 805-806 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 18 பங்குகள் அல்லது 18-ன் மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் முக மதிப்பு 2 ரூபாய்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக் கிழமை நிறுவன முதலீட்டாளர்களி டம் இருந்து 373 கோடி ரூபாயை பிஎஸ்இ திரட்டி இருக்கிறது.
செபி விதிமுறைகளின்படி பிஎஸ்இ பங்குகளை என்எஸ்இ-யில் மட்டுமே பட்டியலிட முடியும். பஜாஜ் ஹோல்டிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல நிறுவன முதலீட்டாளர்கள் உள்ளனர். தவிர 9,000-க்கும் மேற் பட்ட பங்குதாரர்கள் இருக்கின்றனர். பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1,10,23,189 கோடியாக இருக் கிறது. எண்ணிக்கை அடிப்படையில் சர்வதேச அளவில் அதிக பங்குகள் வர்த்தகமாகும் பங்குச்சந்தை பிஎஸ்இ நிறுவனத்தின் உடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.