எல் அண்டி டி ஹைட்ரோகார்பன் இன்ஜினீயரிங் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.1,100 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள போன்கைகோன் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு ஆலையின் திறனை அதிகரிப் பதற்காகவும், எல்பிஜி கையாளும் கட்டமைப்பை உருவாக் குவதற்காகவும் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஐஓசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எல் அண்ட் டி ஹைட்ரோ கார்பன் இன்ஜினீயரிங் நிறுவனம், என் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள கடிதத்தில் ஐஓசி ஆலையில் ஆப்சோர் இபிசி ஒப்பந்தம் ரூ.1,100 கோடிக்கு மேற்கொண்டுள்ளதாகவும், ஆண் டுக்கு 0.740 மில்லியன் மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பெட்ரோலிய கிடங்கு மற்றும் எல்பிஜி கையாளும் வசதியை எல் அண்ட் டி அமைக்க உள்ள தாகவும் கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இன்ஜினி யரிங் பரிமாற்றம், போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட பணிகளும் அடங்கும். இந்த ஒப்பந்தம் சர்வ தேச நிறுவனங்களுடன் போட்டி யிட்டு பெற்றதாகும் என்று எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது. டெக்னாலஜி, கட்டுமானம், பொறியியல், உற்பத்தி மற்றும் நிதிச் சேவை உள்ளிட்ட துறை களில் எல் அண்ட் டி 30 நாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.