கடந்த மே மாதம் இந்திய நிறுவ னங்கள் 132 கோடி டாலர் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி உள்ளது. இந்த தொகை 2015-ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 45 சதவீதம் குறை வாகும். கடந்த வருட மே மாதம் இந்திய நிறுவனங்கள் 239 கோடி டாலர் அளவுக்கு வெளிநாட்டு சந்தையில் கடன் வாங்கி உள்ளன.
இசிபி மற்றும் எப்சிசிபி முறையில் இந்திய நிறுவனங்கள் கடன் வாங்கி உள்ளன.
இதில் ஹெச்டிஎப்சி 37.5 கோடி டாலர், ரிலையன்ஸ் 19.07 கோடி டாலர், அதானி போர்ட்ஸ் 15 கோடி டாலர் மற்றும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் 13 கோடி டாலர் கடன் வாங்கி உள்ளன. இதுதவிர சின்டெக்ஸ் (11 கோடி டாலர்), அல்ட்ராடெக் சிமென்ட்(5 கோடி டாலர்) மற்றும் எக்ஸிம் பேங்க் (5 கோடி டாலர்) கடன் வாங்கியுள்ளன.