வணிகம்

அட்வான்ஸ்டு என்ஸைம் ஐபிஓ: 116 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

பிடிஐ

அட்வான்ஸ்டு என்ஸைம் நிறு வனம் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 411 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டி ருந்தை விட 116 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. கடந்த 9 வருடங்களில் அதிக மடங்குக்கு விண்ணப்பிக்கப்பட்ட ஐபிஓ பட்டியலில் இந்த நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. எட்டு லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஐபிஓவுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட (கியூஐபி) பங்கு களுக்கு 94.03 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதேபோல நிறுவன முதலீட்டாளர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளை வாங்க 393.10 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை வாங்குவதற்கு 11.6 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன.

இது தவிர 15 நிறுவன முதலீட்டாளர்களிடம் 123 கோடி ரூபாயை இந்த நிறுவனம் திரட்டியது குறிப்பிடத்தக்கது. ஒரு பங்குக்கு ரூ.880 முதல் ரூ. 896 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT