வணிகம்

இவரைத் தெரியுமா?- நோம் ஜூடா

செய்திப்பிரிவு

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச செயல் பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். 2004-ம் ஆண்டி லிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இம்பீரியல் ஆயில் நிறுவனத்தில் சிஸ்டம் அனலிஸ்டாக 1979-ம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை பணியாற்றினார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 27 ஆண்டுகளாக உள்ளார். நிறு வனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.

தொழில்நுட்ப உத்திகள், தொழில்நுட்ப பணியாளர் தேர்வு, நிறுவனத் திட்டமிடல், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவற்றில் வல்லுநர்.

விண்டோஸ் அஸூர், ஆபிஸ்365, விண்டோஸ் போன், விண்டோஸ் 8 உள்ளிட்டவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

தென்னாப்பிரிகாவில் உள்ள விட்வாட்டர்ஸ்ரண்ட் பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டமும், கனடாவில் உள்ள டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் சிஸ்டம் கண்ட்ரோல் உயர்கல்வி பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT