வணிகம்

ஹோண்டா அமேஸ்: இந்தியாவில் 2 லட்சம் கார்கள் விற்பனை

பிடிஐ

இந்தியாவில் ஹோண்டா அமேஸ் கார்களின் விற்பனை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 2013ல் அறிமுகப்படுத்தப்பட்ட காம் பாக்ட் செடான் ரக அமேஸ் கார் உள்நாட்டுச் சந்தையில் 2 லட்சம் விற்பனை என்கிற சாதனை இலக்கை எட்டியுள்ளது என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் டீசலில் இயங்கும் அமேஸ் காரை ஹோண்டா 2013ல் அறிமுகப்படுத் தியது. மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது புதிய மைல்கல் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கார் பரவலானதற்கு முக்கிய காரணம் பெரிய மற்றும் சிறிய நகரங்கள் இரண்டிலும் நல்ல வரவேற்பு இருந்தது என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு முதன்மை துணைத் தலைவர் ஜானேஸ்வர் சென் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வசதிகளுடன் மேம் படுத்தப்பட்ட புதிய காம்பாக்ட் செடான் கடந்த மார்ச் மாதத்தில் அறி முகப்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த காரின் டெல்லி விற்பனையக விலை ரூ.5.41 லட்சத்திலிருந்து ரூ.8.31 லட்சமாக உள்ளது.

SCROLL FOR NEXT