வணிகம்

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வேண்டும்: மம்தா பானர்ஜி

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இதைக் கூறினார்.

மாநில நிதி அமைச்சரும், ஜிஎஸ்டிக்காக அதிகாரம் அளிக்கப் பட்ட நிதியமைச்சர் குழுவின் தலைவருமான அமித் மித்ராவிடம் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாஜக தலைமையிலான அரசுக்கு நாங்கள் எதிரானவர்கள்தான். அரசியல் ரீதியாக அவர்களை நாங்கள் எதிர்ப்போம் ஆனால் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT