பிக்டேட்டா, கிளவுட் மற்றும் மொபிலிட்டி ஆகிய புதிய தொழில்நுட்பங்கள் ஐடி துறையின் அடுத்த கட்ட பிஸினஸ் வாய்ப்பை உருவாக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறையின் உயரிய அமைப்பான நாஸ்காம் கருத்து தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கான வருடந்திர தொழில்நுட்ப மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில் வருங்கால தொழில்நுட்பங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான் மேலே சொன்ன புதிய தொழில் நுட்பங்கள்தான் ஐ.டிதுறையின் எதிர்கால வளர்ச்சியை உருவாக்கும் என்று நாஸ்காமின் தலைவர் சோம் மித்தல் தெரிவித்தார். மேலும் இந்த புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி 2020-ம் ஆண்டின் இலக்கான 300 பில்லியன் மதிப்புடைய துறையாக ஐ.டி.துறை மாறும் என்றும் தெரிவித்தார்.