ஐடியா குழுமத்தின் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவின் 2017-ம் நிதியாண்டுக்கான சம்பளம் ரூ.3.30 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவருக்கு இந்த ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. ஐடியா நிறுவனத்தில் பிர்லாவுக்கு 0.01 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன. ஐடியா ஊழியர்களுக்கு வழங்கப்படும் சராசரி சம்பளத்தைவிட இது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடியா நிறுவனம் ஊழியர்களின் சராசரி சம்பள விகிதத்தை உயர்த்தி யுள்ளது. 2016-17 நிதியாண்டில் 8 சதவீதம் உயர்த்தி சராசரி சம்ப ளத்தை ரூ.7.8 லட்சம் ஆக்கியுள் ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிமான்ஸூ கபானியா வின் சம்பளம் 2016-17 நிதியாண் டில் ரூ.10.46 கோடி அளிக்கப் பட்டுள்ளது.
கபானியாவுக்கு அளிக்கப்பட்ட மேலதிகமான ஊதியத்தை திரும்ப பெறுவதற்கு நிறுவனத்தின் விதிமுறைகளில் இடம் உள்ளது. ஆனால் ஜூன் 30ம் தேதி கூட உள்ள நிறுவனத்தின் இயக்குநர் குழு, ஊதியத்தை திரும்ப பெறுவதை தள்ளுபடி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக இயக்குநர் கபானியா வுக்கு 2016-17ம் நிதியாண்டுக்காக அளித்துள்ள மேலதிக ஊதியமான ரூ.3,05,35,524 த்தை திரும்ப பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க நிறுவன உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவும், இந்த கூடுதல் தொகையை பரிந்துரைக்கவும் ஆண்டு பொதுக்குழு கூட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐடியா நிறுவனம் 2016-17 நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வருமானம் ரூ.35,882.7 கோடியாகக் குறைந்துள் ளது. ஒருவேளை நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்றாலோ அல்லது நடப்பாண்டிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போதிய லாபம் ஈட்டவில்லை என்றாலோ கபானியாவுக்கு குறைந்தபட்ச தொகையை அளிக்கவும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.