வணிகம்

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் வசமானது ஏர் கார்னிவெல்: ரூ.70 கோடிக்கு கைமாறியதாக தகவல்

செய்திப்பிரிவு

மண்டல விமான நிறுவனமான ஏர் கார்னிவெல் ஏஞ்சல் முதலீட் டாளர்களுக்கு விற்கப்பட்டு விட்டது. இந்த நிறுவனத்தை ரூ.70 கோடிக்கு ஏஞ்சல் முதலீட்டாளர்கள் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் யாரிடம் விற்கப்பட்டது என்னும் தகவல் வெளியாகவில்லை.

ஏர் கார்னிவெல் நிறுவனத்தின் தலைவர் எஸ். இருதய நாதன் புதிய உரிமையாளர்களிடம் இதற்கான ஒப்பந்ததில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை மாதத்தில் புதிய உரிமையாளர்கள் வசம் நிறுவனம் செல்லும் என தெரிகிறது.

கோவையைச் சேர்ந்த சிஎம்சி குழுமம் ஒரு விமானத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏர் கார்னிவெல் விமான நிறுவனத்தை தொடங்கியது. கோவையில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிறுவனம் விற்கப் போவதாகவும், தகுதி வாய்ந்த நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த வாரம் நாதன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT