நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மறைமுக வரி வருமானம் 5.6 சதவீதம் அதிகரித்து ரூ. 2.85 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. சேவை வரி, சுங்க வரி வருவாய் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணியான உற்பத்தி வரி வருமானம் 1.2 சதவீதம் சரிந்துள்ளது. உற் பத்தி வரி வருவாய் கடந்த 7 மாதங்களில் ரூ. 88,330 கோடி திரட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட மறைமுக வரி வருவாயில் இதுவரை 45.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மறைமுக வரி விதிப்பு முலம் ரூ. 6.24 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு வசூலா னதைவிட 20 சதவீதம் அதிகமாகும். சேவை வரி வருவாய் 10.9 சதவீதம் உயர்ந்ததினால் ரூ.90.673 கோடி வ சூலாகி யுள்ளது. இது பட்ஜெட் இலக்கில் 42 சதவீதமாகும்.
சுங்க வரி வருவாய் 7.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1.06 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது பட்ஜெட் இலக்கில் 52 சதவீதமாகும். கடந்த இரண்டு நிதி ஆண்டு களில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாகவே இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் தொழில் துறை உற்பத்தி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சிகரெட் மீதான உற்பத்தி வரியை 11 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக உயர்த்தினார். இதேபோல பான் மசாலாவுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேசமயம் வருமான வரி விலக்கு வரம்பையும் சற்று அதிகரித்தார்.
வீட்டுக் கடனுக்கு ஊக்கத் தொகை மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்க சலுகை உள்ளிட்டவையும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.