மென்பொருள் விற்பனை நிறுவனமான எஸ்ஏபி-யின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநராக ரவி சௌகான் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அலுவலகத் திலிருந்து கொண்டு இந்தியாவில் நிறுவன வளர்ச்சிக்கு உத்திகள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை சௌகான் மேற்கொள்வார் என்று தெற்காசிய பசிபிக் பிராந்திய தலைவர் அடைர் ஃபாக்ஸ் மார்டின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக ரவி சௌகான் பணியாற்றி வந்தார். அதற்கு முன் நார்டெல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகித் துள்ளார்.