வணிகம்

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தொழில் தொடங்க இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு: மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பிடிஐ

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜெய்ப்பூரில் தொடங்கிய 4-வது இந்திய சிஎல்எம்வி வர்த்தக மாநாட்டில் பேசிய போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடு களின் கூட்டமைப்புதான் சிஎல்எம்வி ஆகும்.

இந்த நாடுகளில் ஜவுளி, வேளாண் கருவி தயாரிப்பு, மருந்து உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்களுக்கு வள மான வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் ஆலைகளை அமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அதிக ஆதாயம் அடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நான்கு நாடுகளும் இந்தியா ஆசியா தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன. இதனால் இந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த நாடுகளில் தொழில் வாய்ப்பு களைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்துவதற்காக ரூ. 500 கோடி நிதியம் உருவாக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்த நான்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க சிறப்புக் குழு (எஸ்பிவி) உருவாக் கப்படும். இதனால் இந்நாடுகளில் ஆலை அமைக்க இந்த எஸ்பிவி உதவும் என்றார். இதனால் தொழில் தொடங்க பல்வேறு அனு மதிக்காக அலைய வேண்டி யிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் வரிச் சலுகையையும் அனுபவிக்கலாம் என்று சுட்டிக் காட்டினார்.

திறன் மேம்பாடு, வேளாண் கருவி தயாரிப்பு, காபி, தேயிலை, மிளகு பயிரிடுவது உள்ளிட்டவற்றில் இருதரப்பினரும் பயன்பெற முடியும். தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

இந்த நாடுகளில் உள்ள துறைமுகம், சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவும், சிஎம்எல்வி நாடு களின் கூட்டமைப்பும் தொடர்ந்து பாடுபாட்டு வருவதாகக் குறிப் பிட்டார்.

இந்தியாவில் கிருஷ்ணபட் டினம், விசாகப்பட்டினம் துறை முகங்களை மேம்படுத்தும் நட வடிக்கை எடுக்கும் அதேநேரத்தில் மியான்மரில் சிட்வே துறைமுகத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

கேஎம்டிடிபி எனப்படும் கலாதன் மல்டி மாடல் டிரான்ஸிட் டிரான்ஸ்போர்ட் திட்டம் செயல் பாட்டுக்கு வரும்போது கொல்கத்தா வழியாக வடகிழக்கு மாநிலங்கள் மூலமாக அனைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இணைப் புக்கு வழி ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வான் வழி இணைப்பை ஏற் படுத்த கயாவில் விமான நிலையம் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடு களுடனான தொடர்பை அதிகரிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. அசாம் மற்றும் குவஹாத்தியிலிருந்து நாட்டின் பிற பாகங்களுக்கு விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

SCROLL FOR NEXT