வணிகம்

வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு உதவ திறன் மேம்பாட்டு அமைப்பு: வெளியுறவு அமைச்சகம் ஒப்பந்தம்

பிடிஐ

வெளிநாடுகளில் வேலை தேடு வோரின் திறமையை மேம்படுத்த வெளியுறவு அமைச்சகமும், திறன் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தொழில் முனைவு அமைச்சகமும் கூட்டாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. பர்வேஸி குஷால் விகாஸ் யோஜனா (பிகேவிஒய்) திட்டத்தை இம்மூன்றும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

இதன் நோக்கமே வெளிநாடு களில் வேலை செய்ய விரும்பு வோரின் திறனை மேம்படுத்துவ தாகும். வேலை தேடுவோருக்கு திறன் மேம்படுத்துவதை ஒரு கல்வி நிறுவனம் அளிக்கும் பயிற்சி போல அளித்து அவர்களை வெளிநாடுகள் எதிர்பார்க்கும் திறன் உடையவர்களாக உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத் தாகும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் இந்திய தொழி லாளர்கள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்வோர் அதிலும் குறிப்பாக ஏஜென்டுகள் மூலமாகச் செல்வோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களிடம் போதிய திறன் அதாவது வேலைக்கு உரிய திறன் இல்லாமலிருப்பதாகும்.

இதைப் போக்கும் வகையில் பர்வேஸி குஷால் விகாஸ் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது. இதன் மூலம் திறன் மேம் படுவதோடு அவர்களுக்கு வேலை கிடைப்பது எளிதாகும். மேலும் அதிக ஊதியமும் கிடைக்கும்.

பிஎம்கேவிஒய் திட்டமானது வெளியுறவு அமைச்சகம் மூலம் கொண்டு வரப்பட்டு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயிற்சி அளிப்பதோடு சான்றிதழும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அத்துறையில் சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 7 லட்சம் முதல் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின் றனர். இதில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளுக்குச் செல்கின் றனர். அவர்கள் அந்த நாட்டின் மொழி, கலாச்சாரம், அங்குள்ள சட்டங்கள் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்து அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு செல்கின் றனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சக செயலர் தியானேஷ்வர் எம் முலே தெரிவித்தார்.

இந்நிலையில் பிஎம்கேவிஒய் திட்டத்தின் மூலம் வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகுந்த பலன ளிக்கக் கூடியது. இந்த பயிற்சியை ஐந்தாண்டுகளுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி வெளி நாடு செல்ல விரும்பும் பணியாளர் தான் விரும்பும் துறையில் தங்க ளது திறனை மேம்படுத்திக் கொள்ள பிரதான் மந்திரி குஷால் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் பயிற்சி பெறலாம். அல்லது வேறு ஏதேனும் அரசு அளிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இத்தகைய பயிற்சியை அளிப்ப தற்காக திறன் மேம்பாட்டு அமைச் சகம் தேசிய திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷனிடம் (என்எஸ்டிசி) சர்வதேச தரத்தில் வெளிநாடுகளில் வேலைக்குத் தேவைப்படும் பயிற்சி மையங்களை உருவாக்குமாறும் இத்திட்டத்தை செயல்படுத்துமாறும் கோரும்.

ஜூலை 15 ம் தேதி உலக திறன் நாளாகும். அன்றைய தினமே வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கான பயிற்சியை இந்தியாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 பயிற்சி மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் செயலர் ரோஹித் நந்தன் தெரிவித்தார்.

வெளிநாடு செல்வோருக்கான பயிற்சிகளை அதாவது மொழிப் புலமை உள்ளிட்ட பயிற்சிகளை வெளியுறவு அமைச்சகம் அளிக் கும். இந்த பயிற்சி மூலம் வெளிநாடு களில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு இந்தியர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்று சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT