வணிகம்

ஜிஎஸ்டி-யின் 4 துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதாவின் நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் இழப்பீட்டு மசோதாவும் இதில் அடங்கும்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும். அடுத்து மாநில சட்டப் பேரவைகளில் இது சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை அமல் செய்ய முடியும். மத்திய அரசின் உற்பத்தி வரி, சேவை வரி, மாநில அரசு விதிக்கும் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முனை வரி விதிப்பாக இது இருக்கும்.

ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கெனவே நான்கு நிலைகளில் வரி விதிப்பு முறையை நிர்ணயித்துள்ளது. 5, 12,18, 28 சதவீதம் என வரி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர சொகுசு கார்கள், குளிர்பானங்கள், புகையிலை பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் ஜிஎஸ்டி-யில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற வரி நிர்ணய முறை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு மசோதாக்கள் அதாவது சிஜிஎஸ்டி மசோதா, ஐஜிஎஸ்டி மசோதா, யூனியன் பிரதேசங்களுக் கான ஜிஎஸ்டி மசோதா, மாநிலங் களுக்கான இழப்பீடு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது

இந்த மசோதாக்கள் அனைத் தும் நடப்பு கூட்டத்தொடரில் நிதி மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது இந்த மசோதா குறித்த விவாதமும் நடைபெறும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாக் கள் குறித்து மட்டுமே விவாதிக் கப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தமான ஜிஎஸ்டி-யை எப்படியாவது அமல்படுத்திவிட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. தற்போது நிர்ணயித்த ஜூலை 1- தேதி முதல் இதை செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது.

SCROLL FOR NEXT