வணிகம்

இவரைத் தெரியுமா?- இகோர் செச்சின்

செய்திப்பிரிவு

ரஷியாவை சேர்ந்த எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

2000-வது ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ரஷிய அதிபரின் செயல் அலுவலக துணைத் தலைவராக இருந்தவர். 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபரின் ஆலோசகராகவும் இருந்தார்.

2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு முதல் துணை பிரதமராகவும் பதவி வகித்தவர்.

2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் பொறுப்பில் இருந்தார்.

ரஷியாவைச் சேர்ந்த இண்டெரோ, சிஎஸ்கேஏ, பைரெலி உள்ளிட்ட பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.

இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்தின் எண்ணெய் நிறுவனத்தை 1,290 கோடி டாலருக்கு கையகப்படுத்தியுள்ளார். நிறுவனத்தின் 12,489,350 பங்குகள் இவரிடம் உள்ளன.

2016-ம் ஆண்டில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் இடம்பிடித்தவர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மாகாண கல்வி நிறுவனத்தில் பொருளாதார ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT