வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.
விஜய் மல்லையாவுக்கும் அவர் நிர்வகித்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ கடந்த மாதம் புதியதொரு வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.
கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு 2005- 2010 காலகட்டத்தில் வங்கிகள் நிதியுதவி வழங்கின. ஆனால், 2009-ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் பணத்தை திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவிட்டது. 2011-ம் ஆண்டு வரையிலும் நிலுவைத் தொகை சிறிதும் திருப்பி வழங்கப்படவில்லை.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.