வணிகம்

பொதுவெளியில் விவாதிக்கப்போவதில்லை: இன்ஃபோசிஸ் தலைவர் ஆர்.சேஷசாயி கருத்து

செய்திப்பிரிவு

இன்ஃபோசிஸ் நிறுவன விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் பொது வெளியில் இனிமேல் நாங்கள் பேசப்போவதில்லை என அந்த நிறு வனத்தின் தலைவர் ஆர்.சேஷசாயி தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியை சந்தித்து பேசினேன். எங்களுடைய கருத்து வேறுபாடுகளை எங்களுக் குள் பேசிக்கொள்வோம் என முதலீட்டாளர் ஒருவரின் கேள்விக்கு ஆர்.சேஷசாயி பதில் அளித்தார்.

நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச் சாட்டுகளை திரும்ப வாங்கப்போவ தில்லை என நாராயணமூர்த்தி கடந்த திங்கள்கிழமை தெரிவித் தார். இருந்தாலும், இது குறித்து மேலும் பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என நாராயணமூர்த்தி தெரிவித்தாகவும் சேஷசாயி தெரிவித்தார்.

நிறுவனர்களின் குற்றச்சாட்டு களில் முக்கியமானது தனிப்பட்ட இயக்குநர் நியமனம் குறித்த குற்றச்சாட்டு. இதற்காக ஆலோ சனை நிறுவனம் ஒன்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் இயக்குநர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை வழங்கும் என சேஷசாயி கூறினார்.

இந்த பிரச்சினையில் இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு மற்றும் விஷால் சிக்காவுக்கு ஆதரவாக முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கூறும்போது இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு நிறுவனர்களால் உருவாகி இருக்கும் தலையீடுகள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என தெரிவித்திருக்கிறது. மேலும் நிறுவனத்தின் செயல்பாடு சீராக இருக்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

கோடக் நிறுவனம் கூறும்போது நிறுவனர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை காரணமாக பங்கு சரிய வாய்ப்பில்லை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஆட்டோமெஷின் மற்றும் டிஜிட்டல் துறைகளில் முதலீடு செய்திருக்கிறது என கோடக் தெரிவித்திருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 0.60 சதவீதம் சரிந்து 981 ரூபாயில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT