வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் 24,800 கோடி யூனிட் மின் உற்பத்தி: என்டிபிசி திட்டம்

செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நடப்பு நிதி ஆண்டில் 24,800 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. என்டிபிசி நிறுவனம் 2016-17 ஆம் ஆண்டிற்கான மின் உற்பத்திக்கு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி நடப்பு நிதி ஆண்டில் 24,800 கோடி யூனிட் மின் உற்பத்தி என்கிற `மிகச் சிறந்த முயற்சி’யை நோக்கி என்டிபிசி செல்கிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் ரூ.30,000 கோடி விரிவாக்க பணிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செயல்பாட்டு திறன், திட்ட கண்காணிப்பு, நிதி செயல் பாடுகள் ஆகியவை குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் மின்துறை செயலர் பிரதீப்குமார் புஜாரி மற்றும் என்டிபிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான குர்தீப் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

என்டிபிசி நிறுவனம் நாடு முழுவதும் பல மின் உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது. இதில் 18 ஆலைகள் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி பணிகளை மேற்கொள்கின்றன. 7 ஆலைகள் எரிவாயு மூலமும், 9 ஆலைகள் மாற்று எரிசக்தி திட்டங்கள் மூலமும், ஒரு நீர் மின் திட்டத்தின் மூலமும் நாட்டின் மின் தேவை களை பூர்த்தி செய்கிறது. 9 கூட்டு மற்றும் துணை நிறுவனங்களின் மூலமும் மின் உற்பத்தியில் ஈடுபடு கிறது. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் 47,178 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT