வணிகம்

என்டிபிசி மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் மேதாக் பகுதியில் அமைய உள்ள என்டிபிசியின் அனல் மின்நிலைய திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மோடி தெலங் கானா சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது. தெலங்கானா பயணத் தில் மேலும் பல திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

முதல் கட்டமாக 1,600 மெகா வாட் உற்பத்தி நிலையமும், இரண்டாம் கட்டமாக 2,400 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய மும் அமைக்க தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.10,598 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே என்டிபிசி மின் நிலையம் இருக்கும் ராமகுண்டம் பகுதியிலே புதிய மின் திட்டங்களும் அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT