சர்வதேச புரோக்கிங் நிறுவன மான மார்கன் ஸ்டான்லி இந்த ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 39000 புள்ளிகளை தொடும் என கணித்திருக்கிறது. மார்கன் ஸ்டான்லி ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் ரிதம் தேசாய் மற்றும் ஷீலா ரதி ஆகியோர் தங்க ளுடைய ஆராய்ச்சி குறிப்பில் இதனை தெரிவித்திருக்கின்றனர்.
மார்கன் ஸ்டான்லி அறிக்கை யில் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய பங்குச்சந்தைகள் பல மாக உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 30000 புள்ளிகளுக்கு மேல் செல்வதற்கு 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது. 39000 புள்ளிகளுக்கு மேல் செல்ல 30 சதவீத வாய்ப்பு இருக்கிறது. சூழ்நிலை மோசமடையும் பட்சத் தில் 24000 புள்ளிகளுக்கு செல் வதற்கு 20 சதவீத வாய்ப்பு இருக்கிறது.
சாதகமான கார்ப்பரேட் சூழ் நிலை, நிறுவனங்களைக் கையகப் படுத்துதல் மற்றும் இணைத்தலின் எண்ணிக்கை உயருதல், நுகர் வோர் தேவை உயர்வது ஆகிய காரணங்களால் பங்குச்சந்தையில் ஏற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கார்ப்பரேட்களை பொறுத்த வரை நுகர்வு தேவை உயரும். மாறாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தனியார் முதலீடுகள் குறைவாக இருப்பது சவாலாக இருக்க கூடும் என மார்கன் ஸ்டான்லி கூறியிருக்கிறது.
மேலும் துறைவாரியாக பார்க்கும் போது, நிதிச்சேவைகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் உயர்வதற்கு வாய்ப்புகள் இருப்ப தாகவும், எரிசக்தி, டெலிகாம் ஆகிய துறைகள் சரிவடைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
தற்போது சென்செக்ஸ் 28300 என்னும் புள்ளியிலும் நிப்டி 8778 என்னும் புள்ளியிலும் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் உயர்வு
நேற்று இந்திய பங்குச்சந்தை கள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஐடி துறை பங்குகளான டெக் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ் ஆகிய துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன. நிப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 8778 புள்ளியிலும், சென் செக்ஸ் 39.78 புள்ளிகள் உயர்ந்து 28329 புள்ளியிலும் முடிவடைந்தது. நேற்றை வர்த்தகத்தின் இடையே இரண்டு குறியீடுகள் சரிந்தன.
துறைவாரியாக பார்க்கும் போது ஐடி குறியீடு 1.64 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதனை தொடர்ந்து டெக்னாலஜி குறியீடு 1.62 சதவீதமும், கன்ஸ்யூமர் டியூரபிள் 0.8 சதவீதமும் உயர்ந் தன. மாறாக மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 0.73 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து வங்கி குறியீடு 0.47 சதவீதம் சரிந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் டிசிஎஸ் 2.72 சதவீதம் உயர்ந் தது. அதனை தொடர்ந்து ஹீரோ மோட்டோ கார்ப், இன்போசிஸ், கெயில் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக சிப்லா, டாடா ஸ்டீல், என்டிபிசி, எல் அண்ட் டி மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.