வணிகம்

பயணிகளுக்கு டாக்சி சேவை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டம்

பிடிஐ

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டாக்சி சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மைடாக்சி இந்தியா (எம்டிஐ) நிறு வனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதனால் விமான பயணத் துக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போதே, பயணிகளை எங்கிருந்து அழைத்து வர வேண்டும் என்றும், இறங்கும் இடத்தில் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் பதிவு செய்துவிட்டால் அவர்களுக்கு டாக்சி சேவை கிடைக்கும்.

பொதுவாக விமான நிலையத்துக்கு உரிய நேரத்தில் வருவதற்கு டாக்சி கிடைக்காமல் அவதிப்படும் நிலை இதனால் தவிர்க்கப்படும். மேலும் புதிய நகரங்களுக்கு உரிய இடத்துக்கு பத்திரமாக சென்று சேரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

இப்புதிய டாக்சி வசதி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் நம்புகிறது.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான எம்டிஐ இந்தியாவில் 119 நகரங்களில் டாக்சி சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தில் 453 கேப் உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஜப்பானின் வாடகை டாக்சி நிறுவனமான நிகோன் கோட்சு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி 300 விமான சேவைகளை 41 நகரங்களிடையே இயக்குகிறது. இதில் 6 வெளிநாட்டு நகரங்களும் அடங்கும்.

SCROLL FOR NEXT