வணிகம்

இவரைத் தெரியுமா?- விஜய் குமார் சர்மா

செய்திப்பிரிவு

இந்திய ஆயுள் காப்பீடு (எல்ஐசி) நிறுவனத்தின் தலைவர். இதற்கு முன்பு எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றினார்.

எல்ஐசி நிறுவனத்தின் நேரடி அதிகாரியாக 1981-ம்ஆண்டு தேர்வானவர். நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங் சார்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தெற்கு மண்டல மேலாளராக பணியாற்றியுள்ளார். 2016ம் ஆண்டு எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தில் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.

அம்டெக் இந்தியா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், எல் அண்ட் எப் பைனான்ஸ், இசிஇ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கி, ஏசிசி நிறுவனங்களில் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநர் பொறுப்பில் உள்ளார்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT