வணிகம்

பங்குச்சந்தையில் 1.13 லட்சம் கோடி அன்னிய முதலீடு

செய்திப்பிரிவு

கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 1.13 லட்சம் கோடி அளவுக்கு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப். ஐ.ஐ.) இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் கடன் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டிலும் இதே நிலை தொடரும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு பி.ஜே.பி. தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அன்னிய முதலீடு தொடரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1.3 லட்சம் கோடி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. 2013-ம் ஆண்டு 7.96 லட்சம் கோடி தொகையை இந்திய பங்குச்சந்தையில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

அதே சமயம் ரூ. 6.84 லட்சம் கோடி தொகையை வெளியே எடுத்திருக்கிறார்கள். மொத்தமாக பார்க்கும் இந்திய சந்தைக்கு ரூ. 1.13 லட்சம் கோடி தொகை வந்திருக்கிறது. 2011-ம் ஆண்டு 2,758 கோடி ரூபாயை வெளியே எடுத்த பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அன்னிய முதலீடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT