இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவுத் தலைவர் சந்தீப் தத்லானி ராஜிநாமா செய்திருக்கிறார். அமெரிக்க பிரிவு தலைவர் மட்டுமல்லாமல் உற்பத்தி, கன்ஸ்யூமர் பேக்கேஜ், ரீடெய்ல் உள்ளிட்ட சில பிரிவுகளின் தலைவராகவும் சந்தீப் இருக்கிறார். தவிர இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான எட்ஜ்வெர்வ் (Edgeverve) நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது ராஜிநாமா இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
புதிய சாப்ட்வேர் சொல்யூ ஷன்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தளமான நியா மூலம் நிறுவனத்துக்கு கூடுதல் வருமானத்தை சந்தீப் ஈட்டித்தருவார் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்கு முக்கியமான தலைவர் களில் ஒருவர் சந்தீப். நிறுவனத்தின் 34 சதவீத வருமானத்துக்கு இவர் பொறுப்பாவார்.
சந்தீப் வெளியேறியதற்கான காரணம் தெளிவாக தெரிய வில்லை. தனிப்பட்ட காரணங் களுக்காக இன்ஃபோசிஸில் இருந்து வெளியேறுவதாக தன் னுடைய லிங்கிட்இன் வலை தளத்தில் தெரிவித்திருக் கிறார்.
இன்ஃபோசிஸ் வளர்ச்சியில் சந்தீப் பங்கு முக்கியமானது. அவருடைய பயணத்துக்கு வாழ்த்துகள் என விஷால் சிக்கா அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.
சந்தீப் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவனத்தில் இணைந்தார். 2014-ம் ஆண்டு புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அப்போது அந்த பட்டியலில் சந்தீப் இருந்தார். ஆனால் விஷால் சிக்கா தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிக்கா பொறுபேற்ற பிறகு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 9-வது முக்கிய நபர் சந்தீப் ஆவார்.