வணிகம்

ஜிஎஸ்டி-யை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தலாம்: நிதித் துறையிடம் விமான அமைச்சகம் வலியுறுத்தல்

ஐஏஎன்எஸ்

மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தத்திட்ட மிட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 1-ம் தேதிக்கு இதை தள்ளி வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறைக்கு ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் இன்ன மும் மாறக்கூடிய அளவுக்கு தங் களை தகுதிப்படுத்திக் கொள்ள வில்லை என்று அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

விமான டிக்கெட்டுகளை பொறுத்தமட்டில் சர்வதேச பயண கட்டணங்களை நிர்ணயிப்பது குறிப்பாக புதிய ஜிஎஸ்டி வரி விதிப்புக்குத் தகுந்தபடி மாற்றியமைப்பதில் கால அவகாசம் தேவை என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான சேவையில் முழுமை யான சேவை அளிக்கும் ஏர் இந் தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறு வனங்கள் சர்வதேச விநியோக முறையை (ஜிடிஎஸ்) பின்பற்று கின்றன. இதற்கான சாஃப்ட்வேர் மூலம் டிக்கெட் முன்பதிவு ஆகிய வற்றை டிராவல் ஏஜென்டுகள் மேற் கொள்கின்றனர். இதில் ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் சில முக்கிய மான மாறுதல்களை செய்ய வேண்டி யுள்ளது என்றும் விமான போக்கு வரத்து அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு சில விமான நிறுவனங்கள் 8 மாதம் முதல் 9 மாதம் வரை கால அவ காசம் கோருகின்றன. இருந்த போதிலும் விமான போக்குவரத்து அமைச்சகம் 2 மாத அவகாசம் கோரியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் நிதி அமைச்சகமோ திட்டமிட்டபடி ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாகும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாகவும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளதாக இத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட தூர பயண விமான டிக்கெட்டுகள் விலை அதிகரிக்கும் என்றும், இடையில் நின்று செல்லும் விமானங்களில் கட்டணம் குறையும் என்றும் இத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையிலிருந்து நியூயார்க் நகருக்கு நேரடியாக செல்லும் விமான கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பானது மொத்த பயண தூரத்துக்கும் கணக்கிடப்படும். ஆனால் வளைகுடா நாடுகளில் இறங்கி பயணத்தைத் தொடரும் விமானங்களில் கட்டணம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சென்னையிலிருந்து துபாய் வழியாக நியூயார்க் செல்லும் விமானத்தில் துபாய் வரையிலான பயண கட்டணத்துக்குத்தான் வரி விதிக்கப்படும் என்று இத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

விமான உதிரி பாகங்களை மாநிலங்களுக்கிடையே எடுத்துச் செல்வதற்கு வரி விதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் விமான போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது. ரயில்வே துறையும் இதேபோன்று உள்நாட்டில் தங்கள் உதிரி பாகங்களை எடுத்துச் செல்வதற்கு வரி விலக்கை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே வாதாடி பெற்று விட்டது.

ஜூன் 18-ல் கவுன்சில் கூட்டம்

இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இம் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. விடுபட்டுப் போன பொருள்களுக்கு வரி விதிப்பு மற்றும் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகள் அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-வது கூட்டத்துக்கு அருண் ஜேட்லி தலைமை வகிக்க உள்ளார். விஞ் யான் பவனில் இந்த கூட்டம் நடை பெற உள்ளது. ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் படும்.

SCROLL FOR NEXT