வணிகம்

ரயில்வே தனியார்மயமாகாது: சுரேஷ் பிரபு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இந்த விஷயத்தில் சாதாரண மக்களின் எண்ணத்துக்கு மாறாக செயல்பட முடியாது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சாதாரண மக்களின் பயணத்துக்காக இயக்கப்பட்டு வரும் ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. தவிர ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதினால் மட்டும் இந்த துறையில் இருக்கும் பிரச்சினைகளை களைய முடியாது. உலகத்தில் மிக சில நாடுகளில் மட்டுமே ரயில்வே தனியார் வசம் இருகிறது. இங்கிலாந்தில் பகுதி அளவு தனியார் வசம் இருக்கிறது.

பொதுச் சேவை வழங்குவது என முடிவெடுத்துவிட்டால், அதனை பொதுச் சேவையாகதான் தொடர வேண்டும். அந்த பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT