ரிசர்வ் வங்கியின் (ஆர்பி) துணை கவர்னர் பதவிக்கு 5 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள கே.சி. சக்ரவர்த்தி தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். இருப்பினும் ஏப்ரல் 25-ம் தேதிவரை பதவியில் தொடரும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக உள்ள கே.ஆர். காமத், பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் விஜயலட்சுமி ஐயர், பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ். முந்த்ரா, கனரா வங்கியின் தலைவர் ஆர்.கே. துபே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் எம். நரேந்திரா ஆகியோரில் ஒருவரை துணை கவர்னராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் இவர்கள் அனைவரும் மும்பைக்கு வரவழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதன் முடிவில் ஒருவர் துணை கவர்னராக தேர்வு செய்யப்படுவர்.
உரிய நபரைத் தேர்வு செய்வதற்காக ஒரு குழுவை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் நியமித்துள்ளார்.
துணை கவர்னராக நியமிக்கப் படுபவர் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கலாம். அல்லது 62 வயது வரை இப்பதவியில் தொடரலாம்.