வணிகம்

9 சதவீத வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி உதவும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் கருத்து

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தபட இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக உயர்வதற்கு ஜிஎஸ்டி உதவும் என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது: ஜிஎஸ்டியால் இந்தியாவில் வரி விகிதம் எளிமையாகவும், தவிர வரி ஏய்ப்பும் செய்ய முடியாது.

நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீதம் முதல் 2% வரை உயரும் என்றும், பணவீக்கம் 2% வரை குறையும் என்றும் பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் என்னும் அடையாளத்தை கடந்த மார்ச் காலாண்டில் இந்தியா இழந்தது.

இந்த நிலையில் அமிதாப் காந்த் கூறியிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, ஏசர் கணினி நிறுவனம், டாலி சாப்ட்வேர் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஜிஎஸ்டிக்கு உதவும் வகையிலான ’பிஸ்குரு ’என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தும் நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த்.

SCROLL FOR NEXT