ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பவன் முன்ஜாலின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.59.66 கோடி. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டை விட 3.94 சதவீதம் உயர்ந்திருக் கிறது. நிறுவன பணியாளர்களின் சராசரி சம்பளத்தை விட பவன் முன்ஜாலின் சம்பளம் 731 மடங்கு அதிகமாகும். பணியாளர்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.8.16 லட்சமாகும்.
இணை நிர்வாக இயக்குநர் சுனில் காந்த் முன்ஜால் சம்பளம் ரூ.20.99 கோடி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நிறுவனத்தில் இருந்தார். பணிக்கொடை, இதர ஓய்வூதிய சலுகைகளை தவிர இந்த சம்ப ளம் அவருக்கு வழங்கப்பட்டிருக் கிறது.
பிஎஸ் 6 தகுதி சான்று வாகன உற்பத்திக்கு தயாராகி வருகி றோம். 2020-ம் ஆண்டு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக இந்த வாகனங் களை சந்தையில் அறிமுகம் செய் வோம் என பவன் முன்ஜால் பங்கு தாரர்களுக்கு எழுதிய கடிதத் தில் தெரிவித்துள்ளார்.