வணிகம்

18 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி உயர்வு

செய்திப்பிரிவு

தொடர்ந்து 18 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி சரிந்து வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது. ஜூன் மாத ஏற்றுமதி 1.2 சதவீதம் உயர்ந்து 2,257 கோடி டாலராக இருக்கிறது.

இன்ஜினீயரிங், பார்மா, மின் னணு பொருள்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியால் ஜூன் மாத ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி 7.33 சதவீதம் அளவுக்கு சரிந்து ரூ.3,068 கோடி டாலராக இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 811 கோடி டாலராக சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் வர்த்தக பற்றாக்குறை 1,082 கோடி டாலராக இருந்தது.

இருந்தாலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற திட்டமிட்டிருப்பதால், ஒரு நிச்சயமற்ற சூழல் உரு வாகி உள்ளது. இதனால் ஏற்றுமதி யாளர்களுக்கு நெருக்கடி அதிகரித் துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் இறக்குமதி 16.42 சதவீதம் சரிந்து 725 கோடி டாலராக இருக்கிறது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையி லான காலாண்டில் மொத்த ஏற்று மதி 6,531 கோடி டாலர் ஆகும். கடந்த வருடத்தின் இதே காலகட் டத்துடன் ஒப்பிடும் போது 2.07 சதவீதம் குறைவு. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்த இறக்குமதி 14.53 சதவீதம் சரிந்து 8,454 கோடி டாலராக இருக்கிறது. முதல் காலாண்டில் வர்த்தகப் பற்றாக் குறை 1,923 கோடி டாலராக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,222 கோடி டாலராக வர்த்தக பற்றாக்குறை இருந்தது.

தங்கம் இறக்குமதி 38% சரிவு

ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதி 38 சதவீதம் சரிந்து 120 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதி 196 கோடி டாலராக இருந்தது. அதேபோல வெள்ளி இறக்குமதி 27 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் 34.23 கோடி டாலராக இருந்த இறக்குமதி, கடந்த ஜூன் மாதத்தில் 24.93 கோடி டாலராக சரிந்திருக்கிறது.

SCROLL FOR NEXT