வணிகம்

பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.101 கோடி

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.101 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைவாக இருப்பதினால் இந்த காலாண்டில் லாபம் ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,505 கோடி ரூபாய் அளவுக்கு நிகர நஷ்டம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காலாண்டில் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.11,086 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,594 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,603 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது ரூ.2,546 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 13.38 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 7.09 சதவீதமாக இருக்கிறது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பதால் இந்த பங்கின் வர்த்தகம் நேற்று 52 வார உச்சபட்ச விலையை தொட்டது. வர்த்தகம் முடிவில் 3 சதவீதம் உயர்ந்து 136.85 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT