வணிகம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

செய்திப்பிரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இன்று காலை நேர வர்த்தகம் துவங்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் குறைந்து, 61.85 என்ற நிலையில் இருந்தது. முன்னதாக நேற்று வர்த்தக நேர முடிவின் போது, ரூபாயின் மதிப்பு 61.6150 என்ற அளவில் முடிந்திருந்தது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்:

இதற்கிடையில் ஆசிய சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெயின் டிசம்பர் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 41 சென்டுகள் உயர்ந்து 93.78 டாலராக உள்ளது.

இதேபோல் பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெயின் டிசம்பர் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 45 சென்டுகள் உயர்ந்து 105.78 டாலராக உள்ளது.

SCROLL FOR NEXT