வணிகம்

‘காபி உற்பத்தி 9% குறையும்’

பிடிஐ

2016-17-ம் ஆண்டுக்கான காபி அறுவடைப் பருவத்தில் உற் பத்தி 9 சதவீத அளவுக்குக் குறை யும் என காபி வாரியம் கணித் துள்ளது. இத்தகவலை மக்கள வையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடுமையான வெப்பம், எதிர்பாராத தொடர் மழை ஆகியவற்றால் காபி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காபி அதிகம் விளையும் கர்நாடகம், தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இங்கிருந்துதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.

விசாகப்பட்டினம் சென்னை தொழில் வளையங்கள் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைப்பது குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு அறிக்கையை தாக்கல் செய் துள்ளதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.4,165 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT